மரக்கன்றுகள் நடும் விழா
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தார். விழாவில் துணைத் தலைவர் விமல்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், முகமது நசீர், மாரியப்பன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.