கடுங்குளிரால் தோட்ட தொழிலாளர்கள் அவதி

கடுங்குளிரால் தோட்ட தொழிலாளர்கள் அவதி

Update: 2022-07-08 16:20 GMT

வால்பாறை

வால்பாறை பகுதியில் 5-வது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள்அவதியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது. இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் மரங்கள் அடிக்கடி விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை பகுதியை சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் பகல் நேரத்தில் பயணம் மேற்கொள் வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்