1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Update: 2022-10-16 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகனேந்தல் கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள கடற்கரை தரவைப் பகுதியில் வனத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ஒரு லட்சம் அலையாத்தி (மாங்குரோஸ்) மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமி திவாகரன் முன்னிலை வகித்தார்.கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் மரக்கன்று நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் கிராம மக்கள் மூலமாக கடலோரப் பகுதி முழுவதும் ஒரு லட்சம் அலையாத்தி செடிகள் நடப்பட்டன. முன்னதாக ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மைய இயக்குனர் சோனியா மெர்சி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர், மண்டல தாசில்தார் சுவாமிநாதன், வனத்துறை மாவட்ட அலுவலர் கணேசலிங்கம், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆலோசகர் பால் பேட்ரிக், யூனியன் ஆணையாளர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மலைராஜன், புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் முகமது முஸ்தபா, அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் ராமசுப்பிரமணியன், வனச்சரக அலுவலர் திவ்யலட்சுமி, யூனியன் பொறியாளர் திலீபன் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரிடர் மேலாண்மை மைய ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யபிரியா நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் வருவாய்த்துறையினர் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பேரணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்