நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மற்றும் வங்கிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலமாக அரசுக்கு சொந்தமான இடங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், மாவட்ட ஊராட்சி அலுவலகம் முதல் கலெக்டரின் முகாம் அலுவலகம் வரை 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
இதில் கொய்யா, சீத்தா, நொச்சி, செம்பருத்தி, நந்தியாவட்டம் உள்ளிட்ட மரக்கன்று வகைகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.