வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

கொள்ளிடம் அருகே வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-12 19:00 GMT

கொள்ளிடம்;

கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி திருபுவனவீரமங்கலம் கிராமத்தில் ரூ 7.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் மற்றும் மாங்கனாம்பட்டு கிராமத்தில் புதிதாக ரூ.7.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் கூட கட்டிடம் மற்றும் அப்பகுதியில் மழைநீர் சேகரிக்கும் தொட்டி உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் கட்டுமான பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்