நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம்,
அஸ்தம்பட்டி, மேட்டுப்பட்டி
சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறத்தப்படுகிறது.
இதேபோல் மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அயோத்தியாப்பட்டணம், அன்னதானப்பட்டி
மேலும் உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சேலம் மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெத்திமேடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.