தூத்துக்குடி பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன
தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, வாலசமுத்திரம் நான்குவழி சாலை, பனையூர் ரோடு, ஏ.குமாரபுரம், புளிய மரத்து அரசடி, அனந்தமடம் பச்சேரி, மேல மருதூர், ஆதிபராசக்தி நகர், ஜார்ஜ் ரோடு, தெற்கு எம்பரர் தெரு தெற்கு பகுதி, வடக்கு காட்டன் ரோடு, உப்பு சங்கம், திரேஸ்புரம் முத்தரையர் காலனி, எஸ்.எஸ்.பிள்ளை தெரு, ஜார்ஜ் ரோடு, வண்ணார் 2-வது தெரு, டூவிபுரம் 1- முதல் 5-வது தெரு வரை, முத்தையாபுரம் அத்திமரப்பட்டி, பொன்னகரம், ரத்தினாபுரி, அபிராமிநகர், ராஜீவ்நகர், முள்ளக்காடு, காந்திநகர், மகாலட்சுமிபுரம், நேருஜி நகர், பொட்டல்காடு, மதகிரி உப்பள பகுதிகள், ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி. சிலோன் காலனி, இந்திராநகர், நயினார் புரம், சில்லா நத்தம், வேலாயுதபுரம், கல்லத்தி கிணறு, மலைப்பட்டி, வடக்கு காரசேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.