சத்தியமங்கலத்தில் பரிதாபம் லாரி மோதி மளிகை கடைக்காரர் பலி

Update: 2022-07-21 21:52 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் லாரி மோதி மளிகை கடைக்காரர் பலியானார்.

மளிகை கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்தவர் அந்தோணி பீட்டர் (வயது 46). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் மளிகை கடை நடத்தி வந்தார். இதற்காக அவர் சத்தியமங்கலம் கொங்கு நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 3 பேரும் படித்து வருகிறார்கள்.

சாவு

நேற்று காலை அந்தோணி பீட்டர் தனது மகள்கள் 2 பேரையும் பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று விட்டு விட்டு வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். சத்தியமங்கலம் அய்யப்பன் நகர் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார்சைக்கிள்மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அந்தோணி பீட்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

லாரிடிரைவர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தோணி பீட்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பையை சேர்ந்த சிவக்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்