புன்னகாயலில் பரிதாபம்:மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

புன்னகாயலில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-10 18:45 GMT

ஆறுமுகநேரி:

புன்னக்காயலில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீனவர்

புன்னக்காயல் பவுலா நகரை சேர்ந்த ஜோசப் மகன் அனிஸ்டன் (வயது 51). மீனவர். இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வம் என்ற மனைவியும், ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதித்த நிலையில் இருந்துள்ளார். அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பவில்லை.

தூக்கில் தொங்கினார்

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ராஜன் மகன் ரீ ஜான்சன் என்பவருடைய வீட்டில் உள்ள கம்பியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து ரீ ஜான்சன் கொடுத்த தகவலின் பேரில் அனிஸ்டன் மனைவி செல்வம் மற்றும் உறவினர்கள் அந்த வீட்டிற்கு சென்று, தூக்கிலிருந்து அவரை மீட்டு

புன்னக்காயலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக மனைவி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்