சென்னையில் குழாயில் உடைப்பு..! ரோட்டில் குளம்போல் தேங்கிய சமையல் எண்ணெய்...!
சென்னையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ரோட்டில் குளம்போல் தேங்கிய சமையல் எண்ணெய் தேங்கியது
சென்னை
சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூருக்கு செல்லும் சமையல் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட விரிசலால், காசிமேட்டில் மீனவர்கள் படகு நிறுத்துமிடத்தில் எண்ணெய் குளம் போல் தேங்கியுள்ளது.
மலேசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட குருடு பாமாயில், திருச்சினாகுப்பம் பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பபட்டு, அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக வரும் குழாயில் நேற்று மதியம் விரிசல் ஏற்பட்டு எண்ணெய் கசிந்ததால், அதனை அப்புறப்படுத்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.