களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-11-11 19:55 GMT

களக்காடு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து களக்காடு தலையணையில் கடந்த 5-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் தலையணையில் குளிக்க கடந்த 5-ந் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இதையொட்டி தடுப்பணை பகுதியில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று தண்ணீர் வரத்து குறைந்தது. இதனை தொடர்ந்து 6 நாட்களுக்கு பின்னர் தலையணையில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்