விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை பயணம்

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டனர்.

Update: 2023-06-05 18:45 GMT

விழுப்புரம் அருகே பிடாகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து ஆண்டுதோறும் திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு 18-ம் ஆண்டாக பாதயாத்திரை பயணம் நேற்று தொடங்கியது. பிடாகம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இக்குழுவினர் விழுப்புரம், விக்கிரவாண்டி, செண்டியம்பாக்கம், ரெட்டணை, தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளார், தென்னாங்கூர், பெருநகர், மாங்கால், காஞ்சீபுரம், சேந்தமங்கலம், அரக்கோணம், திருத்தணி, வி.என்.ஆர்.பேட்டை, நகரி, புத்தூர், வடமால்பேட்டை, திருச்சானூர் அலமேலுமங்காபுரம் வழியாக 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருப்பதியை சென்றடைகின்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பஸ் மூலம் புறப்பட்டு 13-ந் தேதி விழுப்புரம் வந்தடைகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்