தோட்டத்தில் புகுந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய பன்றிகள்

கழுகுமலையில் தோட்டத்தில் பன்றிகள் புகுந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தின.

Update: 2022-12-31 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை பகுதியில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர். இப்பகுதியை அடுத்து குமரேசன் நகர் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பன்றியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வளர்த்து வருகின்றனர். இப்பன்றிகள் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை கடித்து சேதப்படுத்தியது.

இதில் தெற்கு கழுகுமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி நாடார் என்பவரது தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதுகுறித்து மாடசாமி நாடார், கழுகுமலை போலீசில புகார் அளித்துள்ளார். மேலும் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்