காரிமங்கலத்தில் ஏரியில் செத்து மிதந்த பன்றிகள்

Update: 2022-10-05 18:45 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் பேரூராட்சி சந்தைப்பேட்டை, ஏரிக்கரை, பஸ் நிலையம், மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள நாகல் ஏரியில் நேற்று 8-க்கும் மேற்பட்ட பன்றிகள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து காரிமங்கலம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், ஏரியில் செத்து மிதந்த 8 பன்றிகளையும் அப்புறப்படுத்தினர். மேலும் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி பன்றிகளை புதைத்தனர். இதனிடையே ஏரியில் பன்றிகள் செத்து மிதந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பன்றிகள் கொல்லப்பட்டு ஏரியில் வீசப்பட்டதா? அல்லது உணவு தேடி வந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்ததா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்