மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Update: 2023-02-28 10:39 GMT

பொங்கலூர்

பொங்கலூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு பயிற்றுனர் ராஜவேலன் வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி மாணவ- மாணவியருக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். உதவி உபகரணங்களை கையாளும் முறை குறித்து பிசியோதெரபிஸ்ட் ப்ரீத்தி விளக்கி கூறினார். 5 பேருக்கு நடைபயிற்சி உபகரணங்களும், 3 பேருக்கு காதொலி கருவிகள் உள்பட மொத்தம் 17 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பு பயிற்றுனர்கள் மருதைவீரன், நவநீதகிருஷ்ணன், சுதர்சன குமாரி, வசந்தி, அருக்காணி உள்பட அலுவலர்கள் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்