மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 25-ந் தேதி நடக்கிறது

Update: 2022-08-22 18:24 GMT


திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுமாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேசிய அடையாள அட்டை பெற இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்