லாட்டரி சீட்டுகள் விற்ற புகைப்பட கலைஞர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற புகைப்பட கலைஞர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-12 18:28 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). புகைப்பட கலைஞரான இவர் சொந்தமாக புகைப்பட நிலையம் நடத்தி வருகிறார். மேலும் இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்