சென்னையை மிரட்டும் மாண்டஸ் புயல்...! புகைப்பட தொகுப்பு

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

Update: 2022-12-09 13:04 GMT

சென்னை,

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது எனவும், இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  


மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் பலத்த சீற்றம் காரணமாக கடல் அலைகள் 15 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து தாக்கியதால் பலத்த கடல் அரிப்பு அம்மன் கோவில் முன் பக்க அலங்கார வளைவு, தரைதாளம் இடிந்து விழுந்தது.


கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் 1.14 கோடியில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்து சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது. "சேதமடைந்த சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும்" என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 


சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேசிய கொடி பலத்த காற்றின் காரணமாக சேதம் அடைந்தது. உடனடியாக தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய ராணுவ அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விரைந்து செயல்பட்டு ராணுவ அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் சேதம் அடைந்த தேசிய கொடியை மாற்றி மீண்டும் பறக்கவிட்டனர்.    



சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுவதால் சென்னை சீனிவாசபுரத்தில் வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது.


மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். மேலும், மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக தண்ணீரில் சிக்கிய படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.  


'மாண்டஸ்' புயல் அச்சுறுத்தலையொட்டி பொதுமக்களுக்கு உதவுவதற்காக சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தயார் நிலையில் இருக்கும் மீட்பு படையினருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை வழங்கினார்.


மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலை சீறிப்பாய்ந்தது. 


மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது மாண்டஸ் புயல். இதனால் மாமல்லபுரம் அருகே உள்ள தேவனேரி மீனவர் கிராமத்தில் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.


மாண்டஸ் புயலால் இன்று மாலை சோழிங்கநல்லூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சோழிங்கநல்லூரிலிருந்து கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

 


 



 


 


 


 



Tags:    

மேலும் செய்திகள்