அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வீலிநாயக்கன்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

Update: 2022-06-24 17:32 GMT

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வீலிநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, படித்த இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மகப்பேறு நிதிஉதவி திட்டம், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு நிதிஉதவி திட்டம், சமுதாய வளைகாப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவுத்துறை கடன் தள்ளுபடி, 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு திட்டங்களை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.

மேலும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், வளர்ச்சி பணிகளை அவர்கள் ஆய்வு செய்த புகைப்படங்களும் கண்காட்சியில் இருந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்