மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் கூடலூரில் புகைப்பட கண்காட்சி

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் கூடலூரில் புகைப்பட கண்காட்சி

Update: 2023-02-18 10:28 GMT

கூடலூர்

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மக்கள் தொடர்பகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி திறப்பு விழா கூடலூர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்குதகவல் ஒளிபரப்பு அமைச்சக தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர் முன்னிலை வகித்தார். கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் கலந்து கொண்ட ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை மண்டல அலுவலக இயக்குனர் காமராஜ் வரவேற்றார். மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை பேசினார். அப்போது, வரலாற்றை பாடமாக எடுத்து படிப்பவர்கள் கூட சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்ததில்லை. இதனால் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வரலாற்றை, தகவல்களை வெளிக்கொண்டுவரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது. தமிழகத்தில் 1,500 சுதந்திர போராட்ட வீரர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் கடனுதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜ், பள்ளிக்கூட மாணவ- மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மக்கள் தொடர்பு அலுவலர் பிபின் எஸ். நாத் நன்றி கூறினார். தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை கண்காட்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்