புகைப்பட கண்காட்சி
மந்திக்கண்மாய் கிராமத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மந்திக்கண்மாய் கிராமத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்பட கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.
மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அலுவலர்கள் செய்து இருந்தனர்.