2-வது கட்ட மனு நீதி நாள் முகாம்

2-வது கட்ட மனு நீதி நாள் முகாம் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Update: 2023-04-12 21:09 GMT

குலசேகரம், 

குலசேகரம் அருகே தும்பகோடு கிராமத்தில் உண்ணியூர்கோணம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டரின் 2-வது கட்ட மனுநீதி நாள் மற்றும் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது, 'இணைய வழி மூலம் பட்டா கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன, குறிப்பாக உட்பிரிவு கேட்டு வரும் பட்டா விண்ணப்பங்களுக்கும் வாரம் தோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன' என்றார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகிக்கிறார். திருவட்டார் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகநாதன், திற்பரப்பு பேரூராட்சித்தலைவர் பொன்.ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் திருப்பதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுப்பையா, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் (விவசாயம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாகராஜன், வேளாண் துறை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜான் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறி்த்து பேசினர். திருவட்டார் தாசில்தார் தாஸ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஆணையர் யசோதா, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், திற்பரப்பு கூட்டுறவு சங்க தலைவர் ஜூடஸ்குமார், திற்பரப்பு பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் வேளாண் துறை உள்பட பல்வேறு துறை சார்பிலான கண்காட்சிகள் மற்றும் இல்லம் தேடி மருத்துவ திட்டம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்