2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் - ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி

இந்த கடன் மூலம் வழித்தடம் 4 மற்றும் 5 ல் சுரங்க பணிகளையும் உயர்மட்ட மேம்பால பணிகளையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2023-02-03 04:49 GMT

சென்னை,

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளுக்கு முதல் தவணையாக 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது.

இந்த கடன் மூலம் வழித்தடம் 4 மற்றும் 5 ல் சுரங்க பணிகளையும் உயர்மட்ட மேம்பால பணிகளையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்