மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு மருத்துவமனை முன்பு கொரோனா ஊக்கத்தொகை வழங்கக்கோரி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-12 18:28 GMT

ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பிரேம்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.காலியாக உள்ள 1350-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும், மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும், 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

ஊதிய முரண்பாடு

110 தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் உள்ள மருந்து கிடங்குகளை பராமரித்திட தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்க வேண்டும், தலைமை மருந்தாளுனர் மருந்து கிடங்கு அலுவலர் ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்,புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதலாக தலைமை மருந்தாளுனர் மருந்து கிடங்கு அலுவலர் மற்றும் மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்