அந்தியூர் அருகே விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலம்- சீரமைக்க கோரிக்கை
அந்தியூர் அருகே விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலம்- சீரமைக்க கோரிக்கை
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் இருந்து நல்லா மூப்பனூர் செல்லும் ரோட்டில் பாலம் ஒன்று உள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் பாலத்தின் நடுப்பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டும் தட்டுத்தடுமாறி செல்கிறது. பள்ளிக்குழந்தைகள் சைக்கிளில் இந்த பாலத்தின் வழியாக செல்கிறார்கள். பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனே சரிசெய்து சீரமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.