கும்பகோணம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதியதில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பலியானார்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் திருமலை நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது50). இவர் பூந்தோட்டத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் பெட்ரோல் பங்கில் கணக்கை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியை சேர்ந்த மாரிமுத்து (37) என்பவர் கும்பகோணத்தி்ற்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
சாவு
முத்துப்பிள்ளை மண்டபம் அருகே வந்த போது எதிர்பாரதவிதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர்
மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.