கோவையில் மேலும் பரபரப்பு - பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு
பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
கோவை,
கோவை , பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது .பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்ட்டுள்ளது.துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
கோவை சித்தாபுதூரில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது நேற்று இரவு .பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.