ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்

ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

Update: 2022-05-29 12:53 GMT

சீர்காழி:

ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென் பாதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். குற்றப்பிரிவு தடுப்பு தாசில்தார் முருகானந்தம், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

உடனுக்குடன் நடவடிக்கை

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது உடனுக்குடன் கிராம நிர்வாக அலுவலர்கள் தீர்வுகாண வேண்டும். விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர், அவர்கள் கேட்கும் சான்றிதழ்களை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.இதில் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட குபேந்திரன், நவநீதன், வெங்கடேசன், பாலச்சந்திரன் உள்ளிட்ட 89 வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்