பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

Update: 2023-04-16 18:45 GMT

விழுப்புரம்

செஞ்சி தாலுகா பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர் தொல்காப்பியன், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி அன்பழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி விநாயகர், திரவுபதியம்மன், அம்மச்சாரம்மன், பொறையார் அம்மன், அய்யனாரப்பன் ஆகிய கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 24, 25, 26-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்காக கிராமத்தில் மொத்தமுள்ள 5 உபயதாரர்கள், கிராம மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் விழா சிறப்பாக நடைபெறுவதை விரும்பாத சிலர், வீண் பொய் பிரசாரம் செய்துகொண்டு விழா அமைதியான முறையில் நடைபெறுவதை சீர்குலைக்கும் எண்ணத்துடன் பேசி செயல்பட்டு வருகின்றனர். எனவே கும்பாபிஷேக விழா சிறப்பான முறையில் நடைபெற உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்