முகாமில் இருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு கொடுத்து உள்ளனர்.

Update: 2022-06-20 07:35 GMT

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகம் செயல்பட்டு வருகின்றது. இந்த முகாமில் சுமார் 150-க்கும் மேற்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் தொடர்ந்து பாஸ்போர்ட் மோசடி பண மோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட பிறகு இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யக்கோரி அகதிகள் சிறப்பு முகாமில் அவர்களின் உறவினர்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுத்து வந்தனர். பின்னர்

அவர்கள் கூறியதாவது;-

இலங்கை நைஜீரியா பல்வேறு பகுதிகளிலிருந்து எங்களின் உறவினர்கள் தமிழகத்திற்கு வேலை தேடி வந்த பொழுது ஏதாவது ஒரு சிறிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அந்த தவறுக்காக தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறப்பு முகாம்களில் அவர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.

அவர்கள் இல்லையென்றால் எங்களின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும். மேலும் உணவில்லாமல் எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டு வருகின்ற நிலையிலும் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் படுத்தலாம் என்ற அடிப்படையில் நேரில் சந்திப்பதற்காக திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் வந்தால் சந்திக்கக் கூட அனுமதிக்க மறுக்கிறார்கள்.

தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் குடும்பத்தோடு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ தீக்குளித்து எங்களுடைய உயிரை மாய்த்து விடுவோம் என்று கண்ணீரோடு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்