நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-19 18:45 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் குருவாடியை சேர்ந்த மாணிக்கம் அளித்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் வரத்து ஏரியின் ஆக்கிரமிப்பு அகற்றி விடுகிறோம் என அதிகாரிகள் கூறினார். ஆனால் இதுநாள்வரை அகற்றப்படவில்லை. ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ஆண்டுதோறும் சுமார் 50 ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் தண்ணீரால் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன. இதுவரை 57 முறை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விளைநிலங்களை காக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்