வெளிநாட்டில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கோரி கலெக்டரிடம் மனு

வெளிநாட்டில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-08-24 18:36 GMT

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டியை சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மகன் பிரேம்குமார். இவர் அபுதாபியில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் அவா், கடந்த 21-ந்தேதி அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேம்குமார் இறந்து விட்டதாக, அவா்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரேம்குமார் பெற்றோர் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. விடம் தங்களது மகனின் உடலை பெற்று தரும்படி கோரிக்கையிட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கவிதாராமுவிடம் மனு ஒன்றினை அளித்தார். அதில் அபுதாபியில் இறந்த இலுப்பூர் புங்கினிப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுத்து உதவும்படி தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்