சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை

சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-05-08 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தின் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், தமிழக முழுவதும் தற்போது கோடைகால விடுமுறை முடிந்து பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே கோடை விடுமுறையிலும் மாவட்டத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும்,அதற்கு அனைவரும் வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். சில தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவது மாணவர்களின் உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இதுகுறித்து கலெக்டர் கூடுதல் கவனம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என்றும், மீறி நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்