தருமபுர ஆதீன மடாதிபதியிடம் கோரிக்கை மனு

பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பில் தருமபுர ஆதீன மடாதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்

Update: 2022-06-22 15:09 GMT

கடையம்:

சிவசைலம் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி தருமபுர ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள் கடந்த 2 நாட்களாக சிவசைலத்தில் தங்கி உள்ளார். இந்தநிலையில் கடையம் ஒன்றியம் 23 பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், கடையம் பகுதியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், ஏழை-எளிய பெண்களுக்கு திருமண உதவி நிதி வழங்க கோரியும், கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

கீழாம்பூர் மாரிசுப்பு, அணைந்தபெருமாள்நாடனூர் அழகுதுரை, பாப்பாங்குளம் எல்.ஐ.சி. முருகன், அடைச்சாணி மதியழகன், திருமலைப்பபுரம் மாரியப்பன் ஆகிய பஞ்சாயத்து தலைவர்கள் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்