மனு கொடுக்கும் போராட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விருதுநகர் மின் திட்டக்கிளையின் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திட்ட தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். திட்ட பொருளாளர் சுகுமார் நன்றி கூறினார். போராட்டத்தின் போது, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம்கண்டு அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.