அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்

அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-16 18:05 GMT

பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.இந்த போராட்டத்திற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.பட்டியல் இன மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை செலவு செய்யாமல் காலம் கடத்தும் தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து கோஷமிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக கட்சி நிர்வாகிகள் கொடியேற்றி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்