தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-10-08 18:45 GMT

தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு சமூக மக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாங்கள் கொட்டாகுளத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒரு சமூகமாக குடியிருந்து வருகிறோம். எங்களது பாரம்பரிய தொழில் நெசவு தொழிலாகும். சாயம் பிடிக்க பயன்படுத்தும் பாரம்பரிய வண்ண கலவைத்தொட்டி மற்றும் நூல்கள் உலர்த்தும் கல் தூண்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த தொழிலை செய்து வந்தோம். எங்களது பாரம்பரிய கல் தூண்கள் மற்றும் கலவை தொட்டியை இடித்து சேதப்படுத்தி விட்டனர். அந்த பாரம்பரிய பொருட்களை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆகாஷ் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்