பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் மிராஸ் பண்டாரங்கள் மனு

பபழனி முருகன் கோவிலில் உள்ள 64 மிராஸ் பண்டாரங்கள் நேற்று கோவில் தலைமை அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-08-10 20:15 GMT

பபழனி முருகன் கோவிலில் உள்ள 64 மிராஸ் பண்டாரங்கள் நேற்று கோவில் தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கோவில் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கோவில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தத்தை மிராஸ் பண்டாரங்களாகிய நாங்கள் தான் எடுத்து வருகிறோம். அதேபோல் கோவிலில் சாமிக்கு ஒவ்வொரு பூஜைக்கு தேவையான மலர்களையும் நாங்கள் தான் கொண்டு வருகிறோம். இது பல ஆண்டுகளாக, முன்னோர் வழிவழியாக நாங்கள் செய்து வருகிறோம். இதற்கான ஆதாரங்கள் கோவில் கல்வெட்டுகள், பட்டயங்களில் உள்ளன. இந்நிலையில் கோவிலில் உதவி ஆணையர் உள்ளிட்ட சில அலுவலர்கள் எங்களை தரக்குறைவாக பேசுகின்றனர். குறிப்பாக எங்களுக்கு கோவிலில் எவ்வித உரிமையும் இல்லை என தரக்குறைவாக பேசுகின்றனர். எனவே அவர் மற்றும் அவரை சார்ந்த அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்