ஏரி உபரிநீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

ஏரி உபரிநீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-03-09 19:12 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் உள்ள தீத்தானேரி உபரிநீர் செல்லும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, நினைவூட்டல் மனு அளிப்பதற்காக ஊராட்சி தலைவர் சுமதி பாண்டியன், ஊர் முக்கியஸ்தர் பழனிச்சாமி தலைமையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து, குறிப்பிட்டவர்கள் மட்டும் சென்று மனு அளிக்க வலியுறுத்தினர். இதையடுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள் மனு அளிக்க சென்றனர். அப்போது கலெக்டர் இல்லாததால், அவரது நேர்முக உதவியாளர் பூங்கோதையிடம் மனு அளித்தனர். மேலும் ஏரி உபரி நீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்