புவனகிரி அருகே மனுநீதி நாள் முகாம்

புவனகிரி அருகே மனுநீதி நாள் முகாம் நடந்தது.

Update: 2022-06-24 14:47 GMT

புவனகிரி, 

புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீ கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் சஞ்சய் வரவேற்றார். புவனகிரி தாசில்தார் ரம்யா முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 166 மனுக்களை கொடுத்தனர்.

இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 105 பேருக்கு ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 503 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் தனி தாசில்தார் சித்ரா, மண்டல துணை தாசில்தார் ரத்தினகுமார், தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சாத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்