பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும்

பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-02-15 18:45 GMT

பனைக்குளம். 

தமிழ்நாடு நாடார் பேரவை ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே.முத்துகிருஷ்ணன் கலெக்டர் ஜானிடாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த 28-ந் தேதி தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் ராமநாதபுரத்தில் அரசு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கடந்த வருடம் பட்ஜெட் கூட்ட தொடரில் முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சீனிக்கு பதிலாக பனைவெல்லம், கருப்பட்டி அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் என்றார். அவ்வாறு செய்திருந்தால் தமிழ்நாட்டில் வாழும் 10 லட்சம் பனை மர தொழிலாளர்கள் வாழ்வாதாரம் வளர்ந்திருக்கும். ஆனால ஒருவருடம் ஆகியும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எனவே தாங்கள் பனை மரதொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்