வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்-கலெக்டரிடம், பெண் கோரிக்கை மனு

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்-கலெக்டரிடம், பெண் கோரிக்கை மனு அளித்தார்

Update: 2023-01-18 18:45 GMT

சிவகங்கை, 

கல்லலை அடுத்த மும்முடிச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரமிளா. இவர் தன்னுடைய குழந்தைகளுடன் கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

என்னுடைய கணவர் ராஜ்குமார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் வேலையில் சேர்வதற்காக சென்றார். அவர் கடந்த 15-ம் தேதி போன் மூலம் என்னுடைய குழந்தைகள் மற்றும் என்னிடம் பேசினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் அவருடைய அறையில் தங்கி இருந்த பாண்டி என்பவர் என் கணவர் இறந்து விட்டதாக கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார். அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பு கொள்ள முடியவில்லை. என் கணவருக்கு என்ன நிகழ்ந்தது என்றும்? அவர் எப்படி இறந்தார்? என்றும் தெரியவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்