வைகை தண்ணீர் திறந்துவிடக்கோரி கிராமமக்கள் மனு

வைகை தண்ணீர் திறந்துவிடக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-12-05 16:54 GMT


வைகை தண்ணீர் திறந்துவிடக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

மனு

ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணத்தூர் குரூப், எருமைப் பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:- கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு ராமநாதபுரம் வந்து வீணாக கடலில் கலந்து வருகிறது.

இந்தநிலையில் இந்த தண்ணீர் பொட்டகவயல் கண்மாய் மற்றும் நாயாறு அணைக்கட்டு வழியாக வேலாங்குளம் கண்மாய்களை நிரப்பி நாரணமங்களம் கண்மாயை நிரப்பி உள்ளது. இந்த கண்மாயை தொடர்ந்து எங்களின் கிராமத்தில் உள்ள எருமைப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரவேண்டும். இதற்காக நாரணமங்கலம் கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரியபோது அப்பகுதியினர் மறுத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது கண்மாயை பார்வையிட்டு ஓரிருநாளில் திறந்துவிடுவதாக உறுதி அளித்தனர். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் எங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மழையும் சரியாக பெய்யாததால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன.

உறுதி

எனவே, உடனடியாக தற்போது நிரம்பிய நிலையில் உள்ள நாரணமங்கலம் கண்மாயில் இருந்து எங்களின் எருமைப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட்டு பயிர்களையும் எங்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்