கோக்கலை அருகே கோழிப்பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-கலெக்டர் அலுவலகத்தில் மனு

கோக்கலை அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-07-08 17:16 GMT

நாமக்கல்:

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு

திருச்செங்கோடு தாலுகா கோக்கலை அருகே உள்ள எளையாம்பாளையத்தில் கோழிப்பண்ணை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எளையாம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு வையப்பமலை நாகர்பாளையத்தை சேர்ந்த ஒருவர், ஒரு லட்சம் கோழிகளை வளர்க்கும் வகையில் புதிதாக கோழிப்பண்ணையை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தடை விதிக்க வேண்டும்

அங்கு கோழிப்பண்ணை அமைந்தால், அதில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும் பூச்சிகள் மற்றும் ஈக்கள் தொந்தரவு அதிகரிக்கும். பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதோடு, உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகும்.

இதுகுறித்து கலெக்டர், தாசில்தார், மாவட்ட சுகாதார அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பதிவு தபால் மூலம் மனு அனுப்பி உள்ளோம். எனவே பொதுமக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, எளையாம்பாளையத்தில் புதிதாக கோழிப்பண்ணையை அமைக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்