நூலகத்தை திறக்கக்கோரி கலெக்டரிடம் மனு

35 ஆண்டுகள் பழமையான நூலகத்தை திறக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-06-05 18:09 GMT

ராமநாதபுரம், 

பார்த்திபனூர் பஸ்நிலையம் பகுதியில் நூலக வாசக சாலை கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்த நிலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 30 கிராமத்தினர் இதனை பயன்படுத்தி தங்களின் அறிவுத்திறனை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் முறையான பராமரிப்பின்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கூரை பெயர்ந்ததால் கொரோனா காலத்திற்கு முன்னர் இந்த நூலகம் மூடப் பட்டது. அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் மழையில் நனைந்து பயன்படுத்த முடியாத நிலையில் மூடையில் கட்டி அருகில் உள்ள இ-சேவை மையத்தில் போடப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மீண்டும் வேலை பார்த்து திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை தலைவர் கண் ணப்பன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்