அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மாணவர்கள் மனு

ராமேசுவரம் ஏரகாடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-05-30 17:08 GMT

ராமநாதபுரம், 

ராமேசுவரம் ஏரகாடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அடிப்படை வசதி

ராமேசுவரம் ஏரகாடு கிராமத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் கழிப்பறை கட்டிடம், அடிப்படை வசதி உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் ஏரகாடு கிராமத்தை சேர்ந்த இந்த பள்ளியில் படிக்கும் தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஏரகாடு கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி கட்டிடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர்.

மனு

மனு கொடுக்க வந்த மாணவர்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்து 3 பேரை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர். தொடர்ந்து சமூக ஆர்வலர் உள்ளிட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்