கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

Update: 2022-05-29 15:47 GMT

கிருஷ்ணகிரி:

காவேரிப்பட்டணம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் விமலா தலைமையில், செயலாளர் ரோஜா, பொருளாளர் சக்தி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23-ந் தேதி சுண்டேகுப்பம், அகரம், ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் பொய்யான புகார் மனுவை அளித்துள்ளனர். மேலும் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தின், 36 ஊராட்சி மன்ற தலைவர்களும் பணம் பெற்றுக் கொண்டு தான் பொதுமக்கள் பணிகளை செய்கிறார்கள் என அகரம் மற்றும் சுண்டேகுப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கூறியுள்ளனர். எனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பிய துணைத்தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்