பெருமாள், சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் அதிசயம்

குடியாத்தம் மற்றும் ஆசனாம்பட்டில் பெருமாள், சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-08 14:31 GMT

குடியாத்தம்

குடியாத்தம் மற்றும் ஆசனாம்பட்டில் பெருமாள், சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்

குடியாத்தத்தை அடுத்த மீனூர் மலையில் பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மூலவர் மேற்கு திசை நோக்கி இருந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் மாலைவேளையில் சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணியில் இருந்து 5.45 மணி வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுந்து மூலவர் சூரிய ஒளியில் ஜொலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பினர்.

சிவலிங்கம்

ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு பகுதியில் அமைந்துள்ளது சிவன் கோவிலில் உள்ளது. ஆவணி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் மதியம் 12 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும்படி இக்கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆவணி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரமான இன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், குங்குமம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதைக்காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்