பொங்கலூரை அடுத்த கொடுவாயில்பூதேவி, ஸ்ரீதேவி சமேத விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கார்த்திகை முதல்் தேதியையொட்டி விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.