வாகனங்களில் டீசல் திருடியவர் கைது

எட்டயபுரத்தில் வாகனங்களில் டீசல் திருடியவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-15 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தியதில், அதில் 50 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த லோடு ஆட்ே்டாவின் டிரைவர் எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பொன்ராஜ் (வயது 38) என்பதும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, வேன், ஆட்டோக்களில் இருந்து டீசலை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்ராஜை கைது செய்து, அவரிடம் இருந்து 50 லிட்டர் டீசல் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்